ஐபிஎல் போட்டி இப்படிப்பட்டதா..? வெளிவந்த தகவலால் அதிர்ச்சி.. பிரபல வீரர் விளக்கம்

Asianet News Tamil  
Published : Mar 13, 2018, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
ஐபிஎல் போட்டி இப்படிப்பட்டதா..? வெளிவந்த தகவலால் அதிர்ச்சி.. பிரபல வீரர் விளக்கம்

சுருக்கம்

nehra speaks about bowlers importance in cricket

டி20 போட்டிகள் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்ற பார்வை இருக்கிறது. 20 ஓவர் போட்டிகளில் வெறும் 120 பந்துகள் மட்டுமே வீசப்படும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதால், அது பேட்ஸ்மேன்களின் போட்டியாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் சொல்லவே தேவையில்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடருக்குக்கூட, மிட்செல் ஸ்டார்க்கை தவிர வேறு எந்த பவுலரும் அதிகமான விலைக்கு ஏலம் போகவில்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் கோடி கோடியாக கொட்டி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பெங்களூரு அணியின் பயிற்சியாளருமான ஆஷிஸ் நெஹ்ரா, டி20 போட்டி பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்று சொல்லிவிட முடியாது. பந்துவீச்சாளர்களுக்குமானதுதான்.

ஐந்து போட்டிகளில் சரியாக விளையாடாத பேட்ஸ்மேன், ஆறாவது இன்னிங்ஸில் 40 பந்துகளில் 120 ரன்களோ, 50 பந்தில் 130 ரன்களோ குவித்துவிட்டால் அது பெரிதாக பேசப்படுகிறது. அதேபோல பந்துவீச்சாளர் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தால் அது கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. 4 ஒவர்களில் 60 விட்டுக்கொடுத்தால், அது பெரிய விஷயமாகிவிடுகிறது. 

அனைத்துப் போட்டியிலும் பந்துவீச்சாளர்களில் பங்கும் சமமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்கள் குவித்தாலும் வெற்றி பெற முடியாது. 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் மட்டுமே வெற்றி முடியும். எனவே எந்தவகை கிரிக்கெட்டானாலும் பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

பயிற்சியாளர் பதவியில் இருந்து கொண்டு வீரர்களை என்ன மாதிரியாக மாற்றப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். வீரர்களின் மனநிலையைதான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தெரியும். அதனால், எப்போது என்ன மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என கற்றுக்கொடுக்க இருக்கிறேன் என நெஹ்ரா தெரிவித்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!