லோகேஷ் ராகுலின் புதிய டி20 சாதனை!! இதை செய்த முதல் இந்தியர் ராகுல் தான்

Asianet News Tamil
Published : Mar 13, 2018, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
லோகேஷ் ராகுலின் புதிய டி20 சாதனை!! இதை செய்த முதல் இந்தியர் ராகுல் தான்

சுருக்கம்

logesh rahul new record in twenty over match

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்தது.

இலங்கை முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்ற இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான மற்றொரு போட்டியிலும் வெற்றி பெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 152 ரன்கள் எடுத்தது. 153 என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 17.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணியின் லோகேஷ் ராகுல், ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி வெளியேறினார். டி20 போட்டியில் ஹிட் விக்கெட் ஆன முதல் இந்திய வீரர் ராகுல் தான்.

KL Rahul being the first Indian to be dismissed hit- wicket in T20I 😏

Video credit - @DSportINLive #SLvInd #NidahasTrophy #INDvSL pic.twitter.com/HqNPIscO37
— Swati (@SwatiT_) March 12, 2018

ஜீவன் மெண்டிஸ் வீசிய 10வது ஓவரின் 5வது பந்தை, ராகுல் எதிர்கொண்டார். மெண்டிஸ் வீசிய பந்தை பின்னால் வந்து ஆடிய ராகுல், ஸ்டம்பில் மிதித்து, ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். டி 20 போட்டியில் ஹிட் விக்கெட் ஆன முதல் இந்திய வீரர் ராகுல் தான்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!