
தேசிய ஜூனியர் ரக்பி – 7 சாம்பியன்ஷிப் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இன்றுத் தொடங்குகிறது.
இது தொடர்பாக தமிழக ரக்பி கால்பந்து யூனியன் பொதுச் செயலர் செந்தில் தியாகராஜன் கூறியது:
“பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய ஜூனியர் ரக்பி – 7 சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்கின்றன.
நடப்புச் சாம்பியனான ஒடிஸா தனது முதல் ஆட்டத்தில், கடந்த முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய தமிழக அணியைச் சந்திக்கிறது.
இந்தப் போட்டி, 17 மற்றும் 18 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கான அடித்தளமாக அமையும்' என்றுத் தெரிவித்தார்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.