தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: சண்டிகருக்கு மரண அடி கொடுத்த மே.வங்க அணி...

 
Published : Jan 22, 2018, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: சண்டிகருக்கு மரண அடி கொடுத்த மே.வங்க அணி...

சுருக்கம்

National Basketball Championship west indies gave death to Chandigarh

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் சண்டீகர் அணிக்கு மரண அடி கொடுத்தது மேற்கு வங்க அணி.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்-68 போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்கம் 90-62 என்ற புள்ளிகள் கணக்கில் சண்டீகரை வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 75-57 என்ற கணக்கில் அஸ்ஸாமையும், ராஜஸ்தானை 37-78 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லியும் வீழ்த்தியது.

நடப்புச் சாம்பியனான கேரளம் 62-34 என்ற கணக்கில் மத்தியப் பிரதேசத்தையும், மகாராஷ்டிர அணி 76-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானா அணியையும் வீழ்த்தியது.

ஆடவர் பிரிவு ஆட்டங்களில் கேரளம் 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தியது. கேரள வீரர்கள் ஜினி பென்னி, ஸ்ரீராக் நாயர் தலா 18 புள்ளிகள் எடுத்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் 94-65 என்ற கணக்கில் ஹரியாணாவை வென்றது. குஜராத் வீரர் காசி ராஜன் 26 புள்ளிகளை கைப்பற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தானை 77-55 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது உத்தரகண்ட்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?