மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த ஆடவர், மகளிர் சாம்பியன் வென்று அசத்தல்...

 
Published : Jan 22, 2018, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த ஆடவர், மகளிர் சாம்பியன் வென்று அசத்தல்...

சுருக்கம்

Ethiopia men and Women won Champion in marathan

மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.

மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் சாலமன் டெக்சிசா பந்தய இலக்கான 42 கிலோ மீட்டரை 2 மணி 9 நிமிடம் 34 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார்.

சகநாட்டவரான ஷுமெட் அகல்னா 2 மணி 8 நிமிடம் 35 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், கென்யாவைச் சேர்ந்த ஜோஷுவா கிப்கோரிர் 2 மணி 10 நிமிடம் 30 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.

அதேபோன்று மகளிர் பிரிவில் அமானே கொபேனா 2 மணி 25 நிமிடம் 49 நொடிகளில் முதல் வீராங்கனையாக வந்தார்.

கென்யாவின் போர்னஸ் கிடுர் 2 மணி 28 நிமிடம் 48 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், எத்தியோபியாவின் ஷுமோ ஜினிமோ 2 மணி 29 நிமிடம் 41 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.

இரண்டு பிரிவுகளிலும் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.26 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்களான கோபி தொனகல், நிதேந்திர சிங் ராவ் ஆகியோர் முறையே 11, 12-ஆவது இடங்களைப் பிடித்தனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!