ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து; செம்ம ஆட்டம்...

First Published Jan 22, 2018, 11:30 AM IST
Highlights
Australia defeated and seized the series by england


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதையடுத்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் மூன்று ஆட்டங்களிலும் வென்று தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் செய்தது. பேட் செய்த இங்கிலாந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 19 ஓட்டங்களில் வெளியேற, உடன் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ஓட்டத்தில் நடையைக் கட்டினார். ஜோ ரூட் 27 ஓட்டங்கள் , கேப்டன் இயான் மோர்கன் 41 ஓட்டங்கள் எட்டினர். கடைசி விக்கெட்டாக மொயீன் அலி 6 ஓட்டங்களுக்கு வீழ்ந்தார்.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 100 ஓட்டங்கள் , கிறிஸ் வோக்ஸ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 2 விகெட்கள், பேட்ரிக் கம்மின்ஸ், ஸ்டாய்னிஸ், ஆடம் ஸம்பா, மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் அரைசதம் கடந்து 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 62 ஓட்டங்கள் எடுக்க, உடன் வந்த டேவிட் வார்னர் 8 ஓட்டங்களில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஆடிய கேமரூன் ஒயிட் 17 ஓட்டங்களில் வீழ்ந்தார். பின்னர் வந்தவர்களில் கேப்டன் ஸ்மித் 45ஓட்டங்கள் , மிட்செல் மார்ஷ் 55 ஓட்டங்கள் , ஸ்டாய்னிஸ் 56 ஓட்டங்கள் சேர்த்தனர்.

ஐம்பது ஓவர்முடிவில் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 31 ஓட்டங்கள் , பேட்ரிக் கம்மின்ஸ் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இந்த வெற்றிப் பெற்றதையடுத்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் மூன்று ஆட்டங்களிலும் வென்று தொடரை கைப்பற்றியது.

 

tags
click me!