பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற நாமக்கல் மாணவிக்கு சொந்த கிராமத்தில் மேள தாளங்களுடன் வரவேற்பு...

Asianet News Tamil  
Published : May 10, 2018, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற நாமக்கல் மாணவிக்கு சொந்த கிராமத்தில் மேள தாளங்களுடன் வரவேற்பு...

சுருக்கம்

Namakkal student who won gold in the weight lifting welcomed with their own village ...

ஆசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய நாமக்கல் மாணவி கமலிக்கு சொந்த கிராமத்தில் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் -  கலைச்செல்வி தம்பதியின் மகள் கமலி. இவர் முதுநிலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ஆசிய அளவிலான பளு தூக்குதல் போட்டி நடந்தது. இதில் 47 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட கமலி, 350 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். 

இந்த நிலையில், சொந்த கிராமத்துக்கு திரும்பிய கமலிக்கு ஊர் மக்கள் சார்பில் மேள தாளங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்பதற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க எனது பெற்றோர் மற்றும் இந்த கிராம மக்கள் நிறைய உதவிகள் செய்தனர். அதை நான் மறக்க மாட்டேன். 

பளு தூக்கும் போட்டியில் பல பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே எனது இலட்சியம்.இரயில்வே துறையில் பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளதால், அதற்கு விண்ணப்பித்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

U19 உலகக்கோப்பையில் சதம் விளாசிய விஹான் மல்ஹோத்ரா.. திணறும் ஜிம்பாபே
U19 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேயை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி