முர்ரே, கெர்பர் இருவரும் அதிர்ச்சித் தோல்வி…

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
முர்ரே, கெர்பர் இருவரும் அதிர்ச்சித் தோல்வி…

சுருக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர்களான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

அதேநேரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இதில் 7-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆன்டி முர்ரே 5-7, 7-5, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் உலகின் 50-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரெவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-ஆவது சுற்றோடு வெளியேறிய நிலையில், இப்போது முர்ரேவும் தோற்றுள்ளார்.

ஃபெடரர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (4), 6-4, 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியைத் தோற்கடித்தார். ஃபெடரர் தனது காலிறுதியில் ஸ்வெரெவை சந்திக்கிறார்.

வாவ்ரிங்கா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (2), 7-6 (4), 7-6 (4) என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஆண்ட்ரியாஸ் செப்பியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வாவ்ரிங்கா தனது காலிறுதியில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஏஞ்ஜெலிக் கெர்பர் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ வான்டேவெக்கிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

வான்டேவெக் தனது காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார். முகுருஸா தனது முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் கிறிஸ்டியாவை தோற்கடித்தார்.

அமெரிக்காவின் மூத்த வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் மோனா பார்த்தேலை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து