ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து…

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து…

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றது.

முதல் இரு ஆட்டங்களில் தோற்று தொடரை இழந்த இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்-சாம் பில்லிங்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவர்களில் 98 5 ஓட்டங்கள் சேர்த்தது. அசத்தலாக ஆடிய ஜேசன் 41 பந்துகளில் அரை சதமடிக்க, பில்லிங்ஸ் 35 5 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதையடுத்து ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஜேசன் ராய் 56 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதன்பிறகு ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்தார் கேப்டன் மோர்கன். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் சேர்த்தது. மோர்கன் 44 பந்துகளில் 43 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த பட்லர் 11 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

இதன்பிறகு பேர்ஸ்டோவ் 56 ரன்களில் ஆட்டமிழக்க, மொயீன் அலி 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். அப்போது இங்கிலாந்து 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பென் ஸ்டோக்ஸ்-கிறிஸ் வோக்ஸ் ஜோடி வெளுத்து வாங்க, 49-ஆவது ஓவரில் 300 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து. 19 பந்துகளைச் சந்தித்த கிறிஸ் வோக்ஸ் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரஹானே 1, கே.எல்.ராகுல் 11 ஓட்டங்களில் நடையைக் கட்டினர். இதையடுத்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் யுவராஜ் சிங். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 65 ஓட்டங்கள் சேர்த்தது. 54 பந்துகளில் அரை சதம் கண்ட கோலி, 63 பந்துகளில் 55 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு யுவராஜ் சிங் 45 ஓட்டங்களில் (57 பந்துகள்) வெளியேற, தோனி 25 ஓட்டங்களில் வீழ்ந்தார். இதனால் 31.4 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

ஆனால் 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேதார் ஜாதவ்-ஹார்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக ஆட, இந்தியா சரிவிலிருந்து மீண்டது. ஜாதவ் 46 பந்துகளில் அரை சதமடிக்க, பாண்டியா 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

இந்தியா 277 ஓட்டங்களை எட்டியபோது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார் பாண்டியா. அவர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஜோடி 104 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் வந்த ஜடேஜா 10, அஸ்வின் 1 ஓட்டங்கனில் வெளியேறியபோதும், கேதார் வேகமாக ரன் சேர்க்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

கிறிஸ் வோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை விளாசிய கேதார் ஜாதவ், அடுத்த பந்தில் பவுண்டரியை பறக்கவிட்டார். இதனால் 4 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் அடுத்த இரு பந்துகளில் ஓட்டங்கள் சேர்க்க முடியாமல் திணறிய ஜாதவ், 5-ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அது பில்லிங்ஸ் கையில் தஞ்சம்புகுந்தது. 75 பந்துகளைச் சந்தித்த கேதார் ஜாதவ் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனால் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதை புவனேஸ்வர் குமார் கோட்டைவிட, இந்தியாவால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகவும், கேதார் ஜாதவ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து