mumbai indians ipl: போல்ட்டை விட ஆர்ச்சர் பெரியாளா? மும்பை இந்தியன்ஸ் ஆன்மா பறிப்பு: பீட்டர்ஸன் கொந்தளிப்பு

By Pothy RajFirst Published Apr 23, 2022, 12:57 PM IST
Highlights

mumbai indians ipl :ஸ்பான்ஸர் ஆசையால் ஐபிஎல் டி20 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆன்மா வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. அதன் எதிர்காலம்தான் என்ன என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்பான்ஸர் ஆசையால் ஐபிஎல் டி20 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆன்மா வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. அதன் எதிர்காலம்தான் என்ன என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் 15-வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபகரமாக மாறி வருகிறது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்விஅடைந்தது கிடையாது. ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்து வருகிறது.  அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 7 ஆட்டங்களி்ல் தோல்விஅடைந்த அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிதான்.

ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் ஆட வேண்டும், மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே 7 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோற்றதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கருகியிருக்கிறது. 

ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 புள்ளிகள் எடுத்திருக்க வேண்டும். 16 புள்ளிகள் எடுத்திருந்தால், நிகர ரன்ரேட் நன்கு இருந்தால் உறுதியாகிவிடும். ஒருவேளை 14 புள்ளிகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் இருந்தால், ரன்ரேட் அடிப்படையிலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக காத்திருக்க வேண்டும். இந்த நிலைமை என்பது மதில்மேல் பூனை கதைதான். ஆதலால், மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் கனவு ஏறக்குறைய முடிந்துவிட்டதை என வைக்கலாம்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் மும்பை இந்தியன்ஸ் நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு ஒரு நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆன்மா வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. ஏராளமான நட்சத்திர வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த வீரர்கள் எல்லாம் மற்ற அணிகளில் இணைந்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் மோசமான தொடக்கத்தையே அளிக்கிறார்கள். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தில் வீரர்களைத் தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புகள், இளம் வீரர்கள் இருந்தார்கள். ஆனால், எந்தவிதமான யோசனையும் இல்லாமல் காயமடைந்த, விளையாட உடற்தகுதியில்லாத ஜோப்ரா ஆர்ச்சரை தேர்வு செய்தார்கள், பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் திறமையுடைய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட்டை கைவிட்டார்கள். 

உங்களுக்கு பேட்ஸ்மேன்கள் ஸ்பான்ஸர்ஷிப்பை வெல்வார்கள், பந்துவீச்சாளர்கள் ப்ரீமியர்ஷிப்பை பெற்றுதருவார்கள் என மும்பை அணி நிர்வாகம் கூறலாம். ஆனால் காயமடைந்திருக்கும் ஜோப்ரா ஆர்ச்சருக்கு அதிக இடம் கொடுத்து டிரன்ட் போல்ட்டை அனுப்பியதன் மூலம், பந்துவீச்சு எவ்வாறு பலவீனமடைந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் டி20 போட்டிகளில் மிகவும் மதிப்பு மிக்க வீரர்கள். ஏனென்றால், வித்தியாசமான கோணத்தில், பந்துவீசுவார்கள், அதை போல்ட் சிறப்பாகச் செய்வார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்”

இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்

click me!