பெங்களூருவை வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ்க்கு அசத்தல் வெற்றி...

Asianet News Tamil  
Published : Apr 18, 2018, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
பெங்களூருவை வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ்க்கு அசத்தல் வெற்றி...

சுருக்கம்

Mumbai Indians defeat Bengaluru

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ஓட்டங்களில் வீழ்த்தி அசத்தல் வெற்றிப்  பெற்றது மும்பை இண்டியன்ஸ்.

மும்பைக்கும் - பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை தரப்பில் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷான் ஆகியோர் முதல் பந்திலேயே உமேஷ் பந்துவீச்சில் போல்டானார்கள். லெவிஸ் 65 ஓட்டங்கள், கருணால் பாண்டியா 15 ஓட்டங்கள், பொல்லார்ட் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

ரோஹித் சர்மா 5 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 52 பந்தில் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 17 ஓட்டங்களிலும், மிச்செல் ஓட்டம் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது.

பெங்களூரு தரப்பில் உமேஷ், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

214 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டிகாக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

அதிரடி வீரர்களான டி வில்லியர்ஸ் வெறும் 1 ஓட்டத்திலும், மந்தீப் சிங் 16 ஓட்டங்களிலும், ஆண்டர்சன் ஓட்டம் ஏதுமின்றியும், வாஷிங்டன் சுந்தர் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தது பெங்களூரு அணிக்கு சரிவை ஏற்படுத்தியது. 

மறுமுனையில் கோலி மட்டுமே நிலைத்து ஆடிக் கொண்டிருந்தார். 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு வெறும் 87 ஓட்டங்களுக்கு பெங்களூரு அணி தடுமாறியது.

அப்போது பீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியா வீசிய பந்து பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் வெளியேறினார். சர்பராஸ் கான் 5 ஓட்டங்கள், கிறிஸ் வோக்ஸ் 11 ஓட்டங்கள், உமேஷ் யாதவ் 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். 

கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களுடனும், மொகமது சிராஜ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

மும்பை தரப்பில் கருணால் பாண்டியா 3, பும்ரா, மிச்செல் மெக்ளேனகன் தலா 2, மார்கண்டே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இறுதியில் 46 ஓட்டங்கள்வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தலாக வெற்றியைப் பெற்றது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி