
5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெறவிருந்து. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தனது டூவிட்டர் பக்கத்தில், “எனது மச்சான் தோனியை பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இரு அணிகளுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் டிவைன் பிராவோ குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விளையாடிய டிவைன் பிராவோ விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.