மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதுகின்றன…

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதுகின்றன…

சுருக்கம்

Womens World Cup India - The England Conflict Today ...

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று இங்கிலாந்தில் மோதுகின்றன.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் டெர்பியில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. பிரிஸ்டோலில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஓர் ஆட்டத்தில் மோதும். குரூப் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் 10 ஆட்டங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அந்த 10 ஆட்டங்களிலும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படவுள்ளது. மகளிர் கிரிக்கெட் போட்டியில் டிஆர்எஸ் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆட்டம் இன்று பிற்பகல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!