
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் 2வது ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது அவர் ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதாவது 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது சர்வதேச வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மிட்ச்செல் ஸ்டார்க் 102 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லைன் முஸ்தாக் 104 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி 2வது இடத்தில் இருந்த நிலையில், ஷமி அவரை ஓவர்டேக் செய்துள்ளார்.
அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட ரோகித் சர்மா! உறைந்துபோன வீரர்கள்! என்ன நடந்தது?
நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் 107 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எட்டி இருந்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ 112 போட்டிகளில் 200 விக்கெட் எட்டி இருந்தார். மேலும் ஓடிஐயில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 7வது இந்திய வீரர் முகமது ஷமி ஆவார். இந்திய வீரர்கள் ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, அஜித் அகர்கர், ஜாகீர் கான், கபில் தேவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
காயம் காரணமாக நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாட முகமது ஷமி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து தொடரில் விளையாடினார். அதன்பிறகு நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் கால் பதித்தார். அந்த முதல் போட்டியிலேயே அவர் முத்திரை பதித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஷமிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான்! என்னால் முடிந்தவரை விளையாடுவேன் - உருக்கமாக பேசிய தல தோனி
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.