அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட ரோகித் சர்மா! உறைந்துபோன வீரர்கள்! என்ன நடந்தது?

Published : Feb 20, 2025, 04:39 PM ISTUpdated : Feb 20, 2025, 05:06 PM IST
அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட ரோகித் சர்மா! உறைந்துபோன வீரர்கள்! என்ன நடந்தது?

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோகித் சர்மா அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம். 

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியின் 2வது ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதாவது முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே சௌமியா சர்க்கார் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து களம்புகுந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார். ஆட்டத்தின் 2வது ஓவரில் ஹர்சித் ராணா வீசிய பந்தை அவர் அடித்தபோது அது விராட் கோலியின் கையில் தஞ்சம் புகுந்தது.

எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான்! என்னால் முடிந்தவரை விளையாடுவேன் - உருக்கமாக பேசிய தல தோனி

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 9வது ஓவரில் தான் முக்கியமான சம்பவமே நடந்தது. அதாவது அக்சர் படேல் ஓவரின் 2வது பந்தில் டான்சித் ஹசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் சந்தித்த முதல் பந்திலேயே அக்சர் படேல் பந்தில் கே.எல்.ராகுலின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அக்சர் படேல் ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? என எதிர்பார்ப்பு நிலவியது. அடுத்து களம்புகுந்த இளம் வீரர் ஜாக்கர் அலி அக்சர் படேல் பந்தை டிபென்ஸ் செய்ய முயன்றபோது அது எட்ஜ் ஆகி ரோகித் சர்மா நோக்கி சென்றது. ஆனால் மிகவும் எளிதாக வந்த கேட்சை ரோகித் சர்மா விட்டு விட்டார். இதனால் அக்சர் படேலின் ஹாட்ரிக் வாய்ப்பு கைநழுவிப்போனது. ரோகித் சர்மா சுலபமான கேட்ச் விட்டதும் அக்சர் படேல் மற்றும் களத்தில் இருந்த சக வீரர்கள் அப்படியே உறைந்து போனார்கள்.

மேலும் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும், போட்டியை டிவியில் பார்த்த பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எளியை கேட்ச்சை விட்டதால் விரக்தி அடைந்த ரோகித் சர்மா தரையை கையால் வேகமாக அடித்து விரக்தியை வெளிக்காட்டினார். மேலும் கேட்ச் விட்டதற்காக உடனே அவர் அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பயிற்சியின்போது 270 கிலோ எடை விழுந்து பளுதூக்கும் வீராங்கனை பலி! பதைபதைக்க வைக்கும் வீடியோ!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!