இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகிறார் முகமது கைஃப்..?

By karthikeyan VFirst Published Sep 4, 2018, 4:10 PM IST
Highlights

இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபீல்டர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் முகமது கைஃப் தான்.
 

இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபீல்டர் என்றால் உடனே நினைவுக்கு வருவது முகமது கைஃப் தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றால் ஜாண்டி ரோட்ஸ் நினைவுக்கு வருவதுபோல, இந்திய அணியை பொறுத்தவரை கைஃபின் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்தளவிற்கு மிகச்சிறந்த ஃபீல்டர் கைஃப். 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார் கைஃப். அதன்பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. எனினும் ஓய்வு அறிவிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கைஃப்.

அவர் ஆடிய காலத்தில் இந்திய அணி ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கியது. அவரை சுற்றி குறிப்பிட்ட தூரத்திற்கு, அவரே பார்த்துக்கொள்வார். அவரை தாண்டி பந்து பின்னால் போகாது. அசாத்தியமான கேட்ச்களையும் அசால்டாக பிடிப்பார். அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடிப்பதிலும் தூரத்தில் செல்லும் பந்தை அதிவேகமாக ஓடி மிஸ் செய்துவிடாமல் பிடிப்பதிலும் கைஃப் வல்லவர். 

2006ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை என்றாலும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த கைஃப், நிறைய இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உருவாக்கிவருகிறார். 

இந்நிலையில், மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், கைஃபை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கைஃப், எல்லாருமே என்னுடன் ஃபீல்டிங்கை தொடர்புப்படுத்துகின்றனர். ஆனால் ஃபீல்டிங் மட்டுமல்லாமல் அதை கடந்து நிறைய செய்ய விரும்புகிறேன். ரெய்னா, புவனேஷ்வர் குமார், ஆர்.பி.சிங், பிரவீன் குமார் போன்ற வீரர்களை உத்தர பிரதேசத்திலிருந்து உருவாக்கி கொண்டிருக்கிறேன். ஆந்திராவிலும் இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். ஃபீல்டிங்கை பொறுத்தவரை இளம் இந்திய வீரர்களின் ஃபீல்டிங்கை சீர்படுத்தும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன். ஃபீல்டிங் மட்டுமல்லாமல் அனைத்து வகையிலுமான பயிற்சியளிக்க விரும்புகிறேன். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பதுதான் எனது திட்டம் என கைஃப் பதிலளித்துள்ளார். 
 

click me!