மதுரையில் நடைபெற்ற மோடி கபாடி லீக் இறுதிப் போட்டியில் சேலம் கிழக்கு அணி முதல் பரிசையும், இரண்டாம் பரிசை சேலம் மேற்கு அணியும், மூன்றாம் பரிசை திருநெல்வேலி அணியும் தட்டி சென்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக மாலைத் தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் தமிழக பாஜக சார்பில் மோடி லீக் கபாடி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளானது தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 60இடங்களில் நடைபெற்றது. இதனையடுத்து இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கான இறுதிசுற்று போட்டி மதுரையில் கடந்த 27ஆம் தேதி மதுரா கல்லூரி விளையாட்டு திடலில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இறுதிபோட்டி நடைபெற்றது.
Rssம், நாங்களும் ஒன்னா? திருமாவளவன் ஆவேசம்
undefined
இறுதிப் போட்டியில் சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு அணிகள் மோதின. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார். இதனையடுத்து 3சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 29 - 32 என்ற புள்ளி அடிப்படையில் சேலம் கிழக்கு அணி 3புள்ளிகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது. இரண்டாம் பரிசை சேலம் மேற்கு அணியும், மூன்றாம் பரிசை திருநெல்வேலி அணியும் தட்டி சென்றன.
வெற்றிபெற்ற சேலம் கிழக்கு அணிக்கு 15லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் வெற்றிகோப்பையையும், சேலம் மேற்கு அணிக்கு 10லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும், திருநெல்வேலி அணிக்கு மூன்றாவது பரிசாக 5லட்சம் ரூபாயையும் அண்ணாமலை வழங்கினார். இதனை தொடர்த்து கபாடி போட்டியின் இந்திய, தமிழக வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
RSS இல்லாவிட்டால் இந்தியாவே கொரோனாவால் செத்திருக்கும் - எச்.ராஜா
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்தாண்டு மோடி கபாடி லீக் தஞ்சாவூரில் நடைபெறும், அடுத்த ஆண்டு முதல் பரிசாக 30லட்சம் பரிசு வழங்கவுள்ளோம். இந்த ஆண்டு 60ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர், அடுத்தாண்டு 1லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்களை இந்திய அணியில் இடம்பெற செய்ய வைப்போம். மயிலாடுதுறையில் கபாடி போட்டிக்கான உயர்தர பயிற்சி நிறுவனம் நிச்சயம் கொண்டுவருவோம்.
ஒரு விளையாட்டு போட்டியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த மோடி கபாடி லீக் போட்டியை நடத்தியுள்ளோம். இந்த ஆண்டு போட்டி சரித்திர போட்டியாக நடத்தியுள்ளோம். அடுத்தாண்டு வரலாறாக இருக்கும். வெற்றிபெறும் அணியை அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காக தான் பரிசுத்தொகைகளை வழங்குகிறோம். போட்டியை சிறப்பாக நடத்த உதவிய மதுரை மக்களுக்கு நன்றி தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.