அந்த பையன் பெரிய ஆளா வருவாருனு அன்றைக்கே தெரியும்!! முதல் சந்திப்பில் சம்பவம் செய்த பும்ரா.. நினைவுகூர்ந்து புகழும் ஜான்சன்

By karthikeyan VFirst Published Sep 1, 2018, 11:22 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பும்ராவின் பவுலிங் தன்னை ஈர்த்ததாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவின் பவுலிங்கை பார்த்தபோதே அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை அறிந்ததாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பும்ராவின் பவுலிங் தன்னை ஈர்த்ததாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவின் பவுலிங்கை பார்த்தபோதே அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை அறிந்ததாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவருகிறார் பும்ரா. மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அசத்தலாக பந்துவீசும் பும்ரா, இந்திய அணியின் மிக முக்கியமான வீரராகவும், போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடியவராகவும் திகழ்கிறார். 

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடாத பும்ரா, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடி, 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இந்நிலையில், பும்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், தற்போதைய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகத்திறமையானவர்கள். மிரட்டலாக பந்துவீசுகிறார்கள். 

அதிலும் பும்ரா, அவரை நான் கண்ட முதல் கணத்திலேயே என்னை கவர்ந்துவிட்டார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருவரும் ஆடிய சமயத்தில், வலைப்பயிற்சியின்போது பும்ரா எனக்கு பந்துவீசினார். அப்போது ஷார்ட் பிட்ச் பந்துவீசி எனது ஹெல்மெட்டை தாக்கினார். மிக வேகமாக வீசினார். அவர் எதையும் சிக்கலாக்கி கொள்ளமாட்டார். அவரது துல்லியமான பந்துவீச்சு தான் என்னை மிகவும் கவர்ந்தது என மிட்செல் ஜான்சன் தெரிவித்தார். 

click me!