அந்த பையனை எப்படி டீம்ல எடுக்காமல் இருக்கலாம்..? முன்னாள் கேப்டன் காட்டம்

By karthikeyan VFirst Published Jan 22, 2019, 9:59 AM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே ஆகியோர் ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்ததோடு, அவர்களே ஒரு அணியையும் தேர்வு செய்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர். 

ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்கு பிறகு ஃபின்ச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. இந்திய அணியிடம் வாங்கிய அடி அந்த அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி. ஃபின்ச்சின் தலைமையில் அனுபவமற்ற வீரர்களுடன் திணறிவருகிறது. இந்திய அணியிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஆஸ்திரேலிய அணி இழந்தது. டி20 தொடர் சமனானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரைக்கூட இழக்காத அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. நம்பிக்கையிழந்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே ஆகியோர் ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்ததோடு, அவர்களே ஒரு அணியையும் தேர்வு செய்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர். அந்தளவிற்கு ஆஸ்திரேலிய அணி தேர்வு படுமோசமாக இருந்தது. அதனால்தான் முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக வாய்திறந்து விமர்சிக்க வேண்டிய நிலை உருவானது. 

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் டார்ஷி ஷாட்டை அணியில் சேர்க்காததை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் சாடியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில் ஷார்ட் அருமையாக ஆடிவருகிறார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் ஆடிவரும் ஷார்ட், 5 அரைசதங்களுடன் இந்த சீசனில் அசத்தலாக ஆடிவருகிறார். பேட்டிங் மட்டுமல்லாமல் ஸ்பின் பவுலிங்கும் போடக்கூடியவர் ஷார்ட். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷார்ட்டை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்பதே வார்னேவின் கருத்தாகவும் இருந்தது. 

ஆஸ்திரேலிய அணி ஷார்ட்டை ஒருநாள் அணியில் எப்படி நீக்கலாம்? என கேள்வி எழுப்பி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். 
 

click me!