மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ்: 21-ஆவது ஏடிபி டூர் பட்டம் வென்றார் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ...

Asianet News Tamil  
Published : Mar 05, 2018, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ்: 21-ஆவது ஏடிபி டூர் பட்டம் வென்றார் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ...

சுருக்கம்

Mexico Open tennis Juan Martin Del Potro wins 21st ATP Tour

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ்: 21-ஆவது ஏடிபி டூர் பட்டம் வென்றார் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ...

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின்  ஜுவான் மார்டின் டெல் போட்ரோ சாம்பியன் வென்றார்.

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டி மெக்ஸிகோவில் நடைபெற்றது. இப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் டெல் போட்ரோவும், 8-ஆம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் ஆன்டர்சனை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி டெல் போட்ரோ சாம்பியன் வென்றார்.  இது அவரது 21-ஆவது ஏடிபி டூர் பட்டமாகும்.

இதுவரை 7 முறை ஆன்டர்சனை எதிர்கொண்ட டெல் போட்ரோ, தனது 7-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஸடாக்ஹோம் டென்னிஸ் போட்டியில் பட்டத்தை தக்கவைத்த பிறகு, டெல் போட்ரோ வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.

அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜேமி முர்ரே - பிரேஸிலின் புருனோ சோரஸ் இணை, 7-6(7/4), 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்க சகோதரர்களான பாப் பிரயன் - மைக் பிரயன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
IND vs NZ: தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!