FIH Hockey World Cup 2023: ஒடிசாவில் இன்று ஹாக்கி உலக கோப்பை தொடக்க விழா..! விழாக்கோலம் பூண்ட கட்டாக்

By karthikeyan VFirst Published Jan 9, 2023, 4:21 PM IST
Highlights

ஒடிசாவின் கட்டாக் நகரில் இன்று ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடக்க விழா நடப்பதால் கட்டாக் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
 

ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசா மாநிலத்தில் நடக்கவுள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பை நடந்தது. இந்த ஆண்டு உலக கோப்பையை நடத்த ஒடிசா மாநிலம் முன்வந்ததையடுத்து, வரும் 13 முதல் 29 வரை ஒடிசாவில் ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன.

ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. ஒடிசாவின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன.

தோனி பாணியில் கேப்டன்சியை பாண்டியாவிடம் ஒப்படைங்க..! ரோஹித்துக்கு நெருக்கடி

ஹாக்கி உலக கோப்பை தொடக்க விழா இன்று கட்டாக் நகரில் நடக்கிறது. இதையடுத்து கட்டாக் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடக்க விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய இந்தியா ஹாக்கி தலைவர் திலீப் திர்க்கி, உலக கோப்பை போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஹாக்கி இந்தியா அமைப்பு ஒடிசா அரசுடன் இணைந்து செவ்வனே செய்துள்ளது. ரூர்கேலாவில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பெயரில் சர்வதேச தரத்திலான ஹாக்கி ஸ்டேடியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா கேப்டன்சிக்கே தகுதியில்லாத வீரர்..! கபில் தேவ் கடும் விமர்சனம்

உலகளவில் மிகப்பெரிய ஸ்டேடியமாக இது இருக்கும். உலக கோப்பையில் கலந்துகொள்ளும் அனைத்து அணி வீரர்களும் வந்துவிட்டனர். புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
 

click me!