மெக்ராத்தின் சாதனையை உடைக்கப்போகும் ஆண்டர்சன்!! அந்த சாதனையை உடைக்கும் தகுதி யாருக்கு இருக்கு..? மெக்ராத் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 28, 2018, 10:13 AM IST
Highlights

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துவிட்டால், அதன்பிறகு ஆண்டர்சனை யாராலும் முந்த முடியாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். 
 

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துவிட்டால், அதன்பிறகு ஆண்டர்சனை யாராலும் முந்த முடியாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ராத். இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தற்போது இவரது சாதனையை முறியடிக்க இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. 141 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 557 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினால், மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். 

இந்தியாவுக்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்த தொடர் முடிவதற்குள்ளாக கண்டிப்பாக மெக்ராத்தின் சாதனையை முறியடித்துவிடுவார் ஆண்டர்சன். 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிளென் மெக்ராத், ஆண்டர்சன் மீது எனக்கு பெரிய மரியாத மரியாதை உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். ஒருமுறை எனது 563 விக்கெட்டுகள் சாதனையை ஆண்டர்சன் முறியடித்துவிட்டால், அவரை யாராலும் முந்த முடியாது என்று கருதுகிறேன். சாதனைகள் பெருமைக்குரியவை. எந்த ஒரு உச்சமும் கடக்கப்பட வேண்டியது. ஆண்டர்சன் என்னை கடந்து சென்றால் அதுவும் எனக்கு பெருமைதான். 

அவர் என்னை முந்திய பிறகு எங்குபோய் நிறுத்துகிறார் என்பதை பார்க்கத்தான் நான் ஆவலாக இருக்கிறேன். இந்த காலத்தில் கிரிக்கெட்டின் தன்மை நிறைய மாறியுள்ளது. அதிகமான டி20 போட்டிகள் ஆடப்படுகின்றன. எனவே ஆண்டர்சனின் சாதனையை இனிமேல் யாரலும் உடைக்க முடியாது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக 15 ஆண்டுகளுக்கு பிறகும் கூட ஆண்டர்சன் சிறந்து விளங்குகிறார். இது அவரது உழைப்பையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது என மெக்ராத் தெரிவித்தார். 
 

click me!