
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இடம் பெற்றிருந்த ஜோனாதன் கார்டர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களான கைல் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கான டிரினிடாட் மற்றும் டோபாகோ அணியின் கேப்டனாக இருக்கும் கைல் ஹோப், மேற்கிந்திய் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பரான ஷாய் ஹோப்பின் சகோதரர் ஆவார்.
அதேபோல் அம்ப்ரிஸ், வின்ட்வார்ட் ஐஸ்லேண்ட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேனாக உள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்றுள்ள ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
மாற்றப்பட்ட அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, ராஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லே நர்ஸ், கிரன் பாவெல், ரோவ்மேன் பாவெல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.