புரோ கபடி லீக் - 5: ஜூலை 28-ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்குது

Asianet News Tamil  
Published : Jun 29, 2017, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
புரோ கபடி லீக் - 5: ஜூலை 28-ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்குது

சுருக்கம்

Pro kabaddi league - 5 starts on July 28th in Hyderabad

புரோ கபடி லீக் போட்டியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூலை 28-ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

புரோ கபடி லீக் - 5 போட்டித் தொடர்பான அறிவிப்பு மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், “புரோ கபடி லீக் - 5 ஜூலை 28-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் புதிதாக நான்கு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 12 அணிகளும் 113 ஆட்டங்களில் மோதுகின்றன.

இந்தப் 12 அணிகளும் "ஏ' மற்றும் "பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக இந்த 12 அணிகளும் தங்களது பிரிவுக்குள்ளாக 15 ஆட்டங்களிலும், இதர பிரிவுடன் 7 ஆட்டங்களிலும் மோதவுள்ளன.

மொத்தம் 13 வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இறுதிச் சுற்றுக்கு முன்பாக, இரண்டு வெளியேற்று சுற்றுகளும் உள்ளன.

"ஏ' பிரிவில் உள்ள அணிகள்:

தபாங் டெல்லி, ஜெப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, அரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள்.

"பி' பிரிவில் உள்ள அணிகள்:

தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ் அணிகள்.

ஜூலை 28-ஆம் தேதி ஐதராபாதில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன என்பதும், இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று சென்னையில் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!