
ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் ஐந்தாவது முறையாக போஸ்பிஸிலை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2-ஆவது சுற்றில் கனடாவின் வாஸக் போஸ்பிஸிலை எதிர்கொண்டார் செர்பிய வீரரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச்.
இதில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் ஜோகோவிச். போஸ்பிஸிலை இதுவரை ஐந்து முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள ஜோகோவிச் அனைத்திலும் வெற்றிக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு ஜோகோவிச் பேசியது:
"இந்த ஆண்டில் புல் தரையில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும். இருப்பினும், இந்த ஆட்டத்தை சிறப்பாக உணர்கிறேன். புல் தரையில் சிறப்பாக ஆடக் கூடிய போஸ்பிஸில்க்கு எதிராகவே வெற்றிப் பெற்றுள்ளேன். ஆகவே, இந்த வெற்றிக்காக சந்தோஷம் கொள்கிறேன்" என்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது 2-ஆவது சுற்றில் 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிலிஸ்கோவாவை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் டுவான் யிங் யிங்கை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.