#TokyoOlympics மகளிர் பாக்ஸிங்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றி..! காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

By karthikeyan VFirst Published Jul 25, 2021, 2:01 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பாக்ஸிங் 48-51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் டோமினிகா குடியரசை சேர்ந்த மிகுவெலினா ஹெர்னாண்டெஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் மேரி கோம்.
 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. முதல் நாளில் மகளிர் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கமாக வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தார் மீராபாய் சானு.

2ம் நாளான இன்று, மகளிர் பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார். துப்பாக்கி சுடுதலில் மானு பாகெர், யஷஸ்வினி தேஸ்வால் ஆகியோரும், டேபிள் டென்னிஸில் சத்தியன் ஞானசேகரனும் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தனர்.

இந்நிலையில், மகளிர் பாக்ஸிங் ஃப்ளைவெயிட்(48-51 எடை) பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் மேரி கோம், கரீபியன் நாடான டோமினிகா குடியரசை சேர்ந்த மிகுவெலினா ஹெர்னாண்டெஸை எதிர்கொண்டார். 38 வயதான மேரி கோம், இந்த வயதிலும் மிக அபாரமாக விளையாடி, தன்னை விட 15 வயது குறைவான மிகுவெலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார்.
 

click me!