ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரைபிள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.
ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றிருந்தது.
இந்த நிலையில் தான் 5ஆவது நாளான இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரைபிள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இதே போன்று நடந்த 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தனிப்பட்ட பிரிவில் ஷிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் கைப்பற்றினார். ஆஷி சௌக்ஷி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மேலும், இதில் நடந்த டீம் போட்டியில் ஷிஃப்ட் கவுர் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
A grand welcome of the women's team on their arrival to India after winning the Gold Medal in Asian Games!
— Jagadish (@JagadishRoy07)
A proud moment for every Indian...!!! 🇮🇳 pic.twitter.com/gryJpXtIUN