மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் அசத்தல் ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...

Asianet News Tamil  
Published : Jan 02, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் அசத்தல் ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...

சுருக்கம்

Maharashtra Open Tennis Indian batsman Ramkumar Ramanathan made the first round of the match

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான மகாராஷ்டிர ஓபன், புணேவில் நேற்றுத் தொடங்கியது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் உலகின் 106-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ கார்பலஸ் பேனாவுடன் மோதினார்.

இதில் ராம்குமார் 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  இதனால்  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய ராம்குமார் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட், இத்தாலியின் மார்கோ செச்சினாட்டோவை 7(4)-6, 6(6)-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு பிரான்ஸ் வீரரான கில்லெஸ் சைமன் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்க்ரெனை தோற்கடித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்