பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்...

Asianet News Tamil  
Published : Jan 02, 2018, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்:  உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்...

சுருக்கம்

Brisbane International Tennis Elena Schwidolina of Ukraine progressing to 2nd round

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவாரோவை எதிர்கொண்டார் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விடோலினா.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்விடோலினா, அதனை எளிதாக தன் வசப்படுத்தினார்.  ஆனால், நவாரோ 2-வது செட்டில் மீண்டு ஸ்விடோலினாவுக்கு சவால் அளித்து அதிரடியான ஷாட்களை வீசினார். சற்று

பின்னர், ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந் ஸ்விடோலினா இறுதியில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்விடோலினா, "போட்டிகளில் பங்கேற்காதபோது மிகக் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். எனவே, எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று, உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுக்கும் தகுதி இருப்பதாக உணர்கிறேன். நவாரோ போன்ற பலமான வீராங்கனைகளுக்கு எதிரான வெற்றி, எனது அந்த நம்பிக்கைக்கு ஊக்குவிப்பு அளிக்கின்றன.

சிறந்த ஃபார்முடன் தொடர்ந்து நல்லமுறையில் ஆட்டத்தை விளையாடுவதே எனது நோக்கம். அப்போது கிராண்ட்ஸ்லாமும், தரவரிசை முதலிடமும் எனைத் தேடி வரும்" என்று கூறினார்.

ஸ்விடோலினா தனது 2-வது சுற்றில் குரோஷியாவின் அனா கோஞ்சுவை எதிர்கொள்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!