ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்... லவ்லீனா படைத்த சாதனை... 3 பதக்கங்கள்... 3ம் பெண்கள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 4, 2021, 11:43 AM IST
Highlights

இதுவரை 3 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. மூன்றையும் வென்று தந்தவர்கள் பெண்கள்.

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹெயின், துருக்கியைச் சேர்ந்த புஸேனாஸ் சுர்மெனெலிடம் வீழ்ந்தார். இதன்மூலம், அவர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். மேலும், அவர் வெண்கலப் பதக்கத்தையும் வெல்கிறார்.

விஜேந்தர் சிங் (2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம்) மற்றும் மேரி கோம் (2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம்) ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் லவ்லீனா.

இந்தியாவுக்கு 3வது விருதாக வெண்கலப் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார் லவ்லினா. இதுவரை 3 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. மூன்றையும் வென்று தந்தவர்கள் பெண்கள்.

click me!