#BANvsAUS ஈசியான இலக்கையே அடிக்க முடியாமல் படுமட்டமா தோற்ற ஆஸ்திரேலியா..!

By karthikeyan VFirst Published Aug 3, 2021, 9:59 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெறும் 132 ரன்கள் என்ற இலக்கை அடிக்கமுடியாமல், 23 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.
 

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

ஜோஷ் ஃபிலிப், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அஷ்டான் டர்னர், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர், கேப்டன்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

வங்கதேச அணி:

சௌமியா சர்க்கார், முகமது நயீம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், ஷமீம் ஹுசைன், மெஹிடி ஹசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்,ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் நயீம் சிறப்பாக ஆடி 30 ரன்கள் அடித்தார். ஷகிப் அல் ஹசனும் சிறப்பாக ஆடி 36 ரன்கள் அடித்தார். மஹ்மதுல்லா 20 ரன்களும், அஃபிஃப் ஹுசைன் 23 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. இதையடுத்து 20 ஓவரில் வங்கதேச அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது.

132 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் 3ம் வரிசையில் மிட்செல் மார்ஷை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மிட்செல் மார்ஷ் மட்டும் 45 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர அந்த அணியில் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததையடுத்து, அணியின் ஸ்கோர் உயரவேயில்லை. 20 ஓவரில் வெறும் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 23 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து வங்கதேச அணி டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

click me!