#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..! தரமான சம்பவம் வெயிட்டிங்

Published : Aug 03, 2021, 06:57 PM IST
#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..! தரமான சம்பவம் வெயிட்டிங்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு சதமடித்தால் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துவிடுவார்.  

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, 2019ம் ஆண்டுவரை சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் படைக்கப்பட்ட பல சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, 2019ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

 கடந்த 2 ஆண்டுகளாகவே விராட் கோலி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 2019ல் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் அடித்த சதத்திற்கு பிறகு இன்னும் சதமடிக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் தனது சாதனை பயணத்தை தொடர இங்கிலாந்து தொடர் சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு கேப்டனாக இதுவரை 41 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, ரிக்கி பாண்டிங்குடன் அந்த சாதனையை பகிர்ந்துள்ளார். இன்னும் ஒரு சதமடித்தால் 42 சதங்களுடன், பாண்டிங்கின் சாதனையை தகர்த்துவிடுவார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு சதமடித்தால், ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
 

PREV
click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு