#ENGvsIND முதல் டெஸ்ட்: இந்திய அணியின் ஆடும் லெவன்.. தனது தேர்வை ஃபோட்டோஸ் மூலம் க்ளூ கொடுத்த வாசிம் ஜாஃபர்

By karthikeyan VFirst Published Aug 3, 2021, 5:06 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். ஆனால் நேரடியாக வீரர்களின் பெயர்களை தெரிவிக்காமல், திரைப்பட கதாபாத்திரங்கள் பெயர் மாதிரியான சில துப்புகள் அடங்கிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை(4ம் தேதி) நாட்டிங்காமில் தொடங்குகிறது. ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை வீரர் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், தொடக்க வீரர் மயன்க் அகர்வாலும் பயிற்சியில் தலையில் காயம் ஏற்பட்டு கன்கஷனில் இருப்பதால், அவரும் முதல் போட்டியில் ஆடமாட்டார்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். ஆனால் வீரர்களின் பெயர்களை நேரடியாக தெரிவிக்காமல், திரைப்பட கதாபாத்திரங்களின் பெயர்கள் அடங்கிய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து துப்பு கொடுத்துள்ளார்.

ரித்திக் ரோஷனின் அறிமுக படத்தின் புகைப்படத்தை ரோஹித் சர்மாவின் பெயரை குறிப்பிடுவதற்காக பகிர்ந்துள்ளார். ராகுல் என்ற கதாபாத்திரத்தின் பெயர் கொண்ட ஷாருக்கான் புகைப்படத்தை ராகுலுக்காக வைத்துள்ளார். விராட் கோலியை போலவே இருக்கும் துருக்கி டிவி தொடர் கேரக்டரை விராட் கோலியை குறிக்கும் வகையிலும், எப்போதும் மிகவும் அமைதியாக இருக்கும் புஜாராவிற்கு ஸ்டோன்கோல்டின் புகைப்படத்தையும் வைத்துள்ளார்.

பும்ராவை குறிப்பதற்காக பும்ராவின் பெயர் உச்சரிப்பை போலவே இருக்கும் தமிழ் திரைப்படமான பூமராங்கின் போஸ்ட்டையும், முகமது ஷமியை குறிக்கும் விதமாக பாக்ஸர் முகமது அலியின் புகைப்படத்தையும், இஷாந்த் சர்மாவை குறிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்தில், இஷாந்த்தை போலவே நீண்ட முடி வைத்திருக்கும் ரன்வீர் சிங்கின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஜாஃபர்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா.
 

My Playing XI for the first test🤓 pic.twitter.com/nFohm9cUpD

— Wasim Jaffer (@WasimJaffer14)
click me!