#ENGvsIND அவரை விட இவருதான் சிறந்த ஓபனிங் ஆப்சன்..! கவாஸ்கர் அதிரடி

Published : Aug 03, 2021, 04:04 PM IST
#ENGvsIND அவரை விட இவருதான் சிறந்த ஓபனிங் ஆப்சன்..! கவாஸ்கர் அதிரடி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை(4ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவனை ஏற்கனவே இந்திய அணி உறுதி செய்து, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வைத்திருந்த நிலையில், நேற்று பயிற்சியின் போது தொடக்க வீரர் மயன்க் அகர்வால் பின் மண்டையில் அடிபட்டு கன்கஷனில் உள்ளார்.

ரோஹித்துடன் மயன்க் அகர்வாலை ஓபனிங்கில் இறக்கிவிட்டு, மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கிவிடும் திட்டத்தில் இந்திய அணி இருந்தது. ஆனால் கன்கஷனில் உள்ள மயன்க் அகர்வால் முதல் போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இந்நிலையில், ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் சதமடித்திருக்கிரார். அவர் தான் ஓபனிங்கில் இறங்க வேண்டும். மயன்க் அகர்வாலுக்கு 2019 ஆஸி., சுற்றுப்பயணம் நன்றாக அமைந்தது. ஆனால் கடந்த சுற்றுப்பயணத்தில் தடுமாறினார். 

ஆனால் ராகுல் முழு நம்பிக்கையுடன் திகழ்கிறார். 3ம் வரிசையில் இறங்கும் புஜாராவின் பேட்டிங் ஆர்டரை ஓபனிங்கிற்கு மாற்றுவதெல்லாம் சரியாக இருக்காது. ராகுல் தான் ஓபனிங்கிற்கு சரியான வீரர். கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடைசி போட்டியில் ஓவலில் ராகுல் சதமடித்ததை மறந்துவிடக்கூடாது. மயன்க் அகர்வாலை விட ராகுல் தான் ஓபனிங்கிற்கு சரியான வீரர் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி