#ENGvsIND இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவை இப்பவே சொல்லும் கவாஸ்கர்..!

Published : Aug 03, 2021, 02:56 PM IST
#ENGvsIND இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவை இப்பவே சொல்லும் கவாஸ்கர்..!

சுருக்கம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என்று முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. கடந்த 2 சுற்றுப்பயணங்களிலும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, இம்முறை இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில், இந்திய மண்ணில் மரண அடி வாங்கிய இங்கிலாந்து, தங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், இந்த தொடரை எந்த அணி வெல்லும் என்று கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், என்னுடைய கணிப்பு என்னவென்றால், தொடரின் முடிவு வானிலையின் கையில் தான் உள்ளது.  இங்கிலாந்தில் கடந்த 10 நாட்களாக வானிலை நன்றாக உள்ளது. லேசான மழை பெய்தாலும், பெரும்பாலும் வெயில் தான் அடிக்கிறது. மழை பெய்யாமல் வெப்பநிலை நன்றாக இருக்கும்பட்சத்தில், இந்த தொடர் நடக்கும் மொத்த 25 நாட்களில் 22 நாட்கள் முழுமையாக நடந்தால், இந்திய அணி 4-0 என தொடரை வென்றுவிடும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி