#ENGvsIND எனக்கு இதை சொல்றதுக்கு கடுப்பாதான் இருக்கு..! இந்தியா தான் டெஸ்ட் தொடரை வெல்லும் - மைக்கேல் வான்

By karthikeyan VFirst Published Aug 3, 2021, 2:30 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. கடந்த 2 சுற்றுப்பயணங்களிலும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, இம்முறை இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில், இந்திய மண்ணில் மரண அடி வாங்கிய இங்கிலாந்து, தங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளது.

இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மனநிலை சரியில்லை என்று கூறி கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியதால், அவர் இந்தியாவுக்கு எதிராக ஆடவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், எனது கணிப்பு நடந்தும் இருக்கிறது; பொய்த்தும் போயிருக்கிறது. இந்தியா - இங்கிலாந்து தொடரில் பென் ஸ்டோக்ஸ் ஆடாதது, இங்கிலாந்து அணியின் காம்பினேஷனை பாதிக்கும். ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஆடாததால், இங்கிலாந்து அணி ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் பற்றாக்குறையுடன் ஆடநேரிடும். இது ஜோ ரூட்டுக்கு பிரச்னையாக அமையும்.

இந்திய அணிக்கு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இதுதான் சரியான வாய்ப்பு. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு சற்று ஒத்துழைக்கும். இதை சற்று கடுப்பாகத்தான் சொல்கிறேன்.. ஆனால் சொல்லியாக வேண்டும். பென் ஸ்டோக்ஸ் ஆடாதது, ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகம் ஆகியவை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணி 3-1 என தொடரை வெல்லும் என நினைப்பதாக மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!