
ஒலிம்பிக்கில் 2 முறை இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீரர் சுஷில் குமார். சுஷில் குமாரை சாகர் தன்கட் தொடர்ந்து விமர்சித்துவந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடும் கோபமடைந்து, சாகருக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சுஷில் குமார், கடந்த வாரம் செவ்வாய்கிழமை சாகர் தன்கட்டை அவரின் வீட்டிலிருந்து தனது நண்பர்களின் உதவியுடன் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாகர் தான்கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், சுஷில் குமார் மீதான வழக்கு கொலை வழக்காக பதியப்பட்டுள்ளது.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் இந்த வழக்கிலிருந்து தப்ப, வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிடாமல் தடுக்க, தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது டெல்லி போலீஸ்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.