அஷ்வின் சூப்பர் கேப்டனாம்.. அப்படி என்ன செஞ்சாருனு பாருங்க

First Published May 30, 2018, 8:18 PM IST
Highlights
lokesh rahul opinion about ashwin captaincy


பஞ்சாப் அணியை அஷ்வின் சிறப்பாக வழிநடத்தியதாக அந்த அணியின் வீரர் ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் பஞ்சாப் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை என்றாலும் அந்த அணியின் வீரர் ராகுலுக்கு சிறப்பான சீசனாகவே அமைந்தது. ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, அஷ்வின் தலைமையில் இந்த முறை களம் கண்டது. கெய்ல், ராகுல், ஃபின்ச், மில்லர், கருண் நாயர், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி என சிறந்த அதிரடி வீரர்களுடன் இந்த முறை களமிறங்கியது. 

இந்த சீசனின் முதல் பாதி பஞ்சாப் அணிக்கு சிறப்பாக அமைந்தது. இரண்டாவது பாதி சரியாக அமையவில்லை. பிளே ஆஃபிற்கே தகுதி பெறாமல் லீக்கிலேயே வெளியேறியது. இந்த சீசனில் 14 போட்டிகளில் ஆடி ராகுல், 659 ரன்களை குவித்தார்.

ஐபிஎல் முடிந்துவிட்ட நிலையில், இந்த சீசன் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல், சீசனின் முதல் பாதி சிறப்பாக அமைந்தது. ஆனால் இரண்டாவது பாதி எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இளம் வீரர்கள் நிறைந்த அணியை வழிநடத்துவது சவாலான காரியம். ஆனால் அஷ்வின் சிறப்பாக கேப்டன்சி செய்தார். அவருக்கும் இது சிறந்த அனுபவமாக அமைந்திருக்கும். வீரர்கள் அனைவருக்கும் நல்ல ஆலோசனைகளை அஷ்வின் வழங்குவார். அவரது ஆலோசனைகள் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். குறிப்பாக பவுலர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என ராகுல் தெரிவித்தார்.

click me!