அந்நிய நாட்டிற்காக விளையாடிய இந்தியாவை சேர்ந்த 5 முக்கிய வீரர்கள்

First Published Mar 22, 2018, 5:03 PM IST
Highlights
list of indian origin persons play for foreign countries


இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, ஆனால் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்ததால், அந்நிய நாட்டு அணிக்காக கிரிக்கெட் ஆடும் மற்றும் ஆடிய 5 முக்கியமான வீரர்களை பற்றி பார்ப்போம்..

1. ஹசீம் ஆம்லா - தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனுமான ஹசீம் ஆம்லா, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். குஜராத்தில் பிறந்தவர், பின் நாட்களில் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் சர்வதேச சிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம்வருகிறார்.

2. சந்தர்பால் - வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரர் சந்தர்பால். வெஸ்ட் இண்டீஸில் பிறந்து வளர்ந்து, அந்நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிய சந்தர்பால், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். 1994ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சந்தர்பால், 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11867 ரன்கள் குவித்துள்ளார். 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

3. நாசர் ஹூசைன் - இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் நாசர் ஹூசைன். நாசர் ஹூசைனின் தந்தை இந்தியர்; தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர். சென்னையில் 1968ம் ஆண்டு பிறந்தார் நாசர். பின்னர் 1975ம் ஆண்டு குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்டதால், இங்கிலாந்துக்காக கிரிக்கெட் ஆடினார்.

4. சுனில் நரைன் - வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக காலம் கடந்தும் நினைவில் இருக்கக்கூடிய வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடிவருகிறார்.

5. ரவி போபாரா - இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஆடிய ரவி போபாரா, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். இங்கிலாந்தின் மிக முக்கிய வீரராக வலம்வந்த போபாராவிற்கு அதிகமான  வாய்ப்புகள் கிடைக்காதபோதிலும், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி விளையாடியவர்.
 

click me!