கோலியை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.. அதுவும் அவரது அந்த திறமை!! ஜாம்பவான் பகிரும் சுவாரஸ்ய தகவல்

First Published Mar 22, 2018, 2:37 PM IST
Highlights
daniel vettori praised virat kohli


கேப்டனுக்கான சிறந்த உதாரணம் விராட் கோலி தான் என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் வெட்டோரி புகழ்ந்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச அளவில் சிறந்த அணியாக திகழ்கிறது. விராட் கோலியின் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் தலைமையிலான அணி பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறது.

தனிப்பட்ட முறையிலும் கேப்டனாகவும் சிறப்பான ஆட்டத்தையும் பங்களிப்பையும் கோலி வழங்கிவருகிறார். ஆட்டத்துக்கு ஆட்டம் சதத்தையும் சாதனைகளையும் குவித்துவரும் வரும் கோலி, கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சிலர் முன்னாள் கேப்டன் தோனியின் கூலான அணுகுமுறையை குறிப்பிட்டு கோலியின் ஆக்ரோஷத்தை விமர்சிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறையும் திட்டமும் இருக்கும். அந்த வகையில் தோனியுடன் கோலியை ஒப்பிடுவது சரியாக இருக்காது.

ஐபிஎல் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு அணியின் பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான வெட்டோரி, கோலி குறித்து பேசியுள்ளார்.

கோலி குறித்து கருத்து தெரிவித்த வெட்டோரி, கோலியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பார்த்தே வந்திருக்கிறேன்.  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நான் கேப்டனாக இருந்த போது, அணியில் விராட் கோலியும் இருந்தார். அப்போது இளம் விராட், அணியில் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று, தன்னைத்தானே வளர்த்து சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். 

இந்திய கிரிக்கெட்டின் எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் அவரைப் போல உருவாக முயற்சிக்கிறார்கள். அது இந்திய அணியை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்கிறது. விராட் கோலியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால், அந்த நேரத்திலும் கூட கிரிக்கெட்டை பற்றியே தான் பேசிக்கொண்டிருப்பார்.  அதிலிருந்தே கிரிக்கெட்டை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரியும். 

அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட்டில் மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற வேட்கை உள்ளவராக இருக்கிறார். உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க விரும்புகிறார். அதற்கான திறமையை பெற்றிருக்கும் கோலி, திறமையை வளர்த்தும் கொண்டிருக்கிறார். கேப்டனுக்கான சிறந்த உதாரணம் கோலி தான் என வெட்டோரி புகழ்ந்துள்ளார்.
 

click me!