முதலிடத்தைப் பெற்று லீவிஸ் ஹாமில்டனின் 50-வது வெற்றி…

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 02:16 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
முதலிடத்தைப் பெற்று லீவிஸ் ஹாமில்டனின் 50-வது வெற்றி…

சுருக்கம்

டெக்சாஸ்,

பிரபலமான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 18–வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி கார் பந்தயம் டெக்சாஸ்சில் நடந்தது. இதில் 22 வீரர்கள் கலந்து கொண்டு காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள்.

308.405 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) சக அணி வீரர் நிகோ ரோஸ்பர்க்கை (ஜெர்மனி) பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்தார்.

பார்முலா 1 போட்டியில் ஹாமில்டன் பெற்ற 50–வது வெற்றி இதுவாகும். லீவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை 1 மணி 38 நிமிடம் 12.618 வினாடியில் கடந்தார். ரோஸ்பர்க் 4.520 நிமிடம் பின்தங்கி 2–வது இடத்தை பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் டேனியர் ரிச்சியர்டோ 3–வது இடம் பெற்றார்.

18–வது சுற்று பந்தயம் முடிவில் ஜெர்மனி வீரர் ரோஸ்பர்க் (331 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். லீவிஸ் ஹாமில்டன் 305 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளார். பார்முலா 1 கார் பந்தயத்தின் 19–வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி வருகிற 30ஆம் தேதி நடக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!
நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!