முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் வெற்றி…

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் வெற்றி…

சுருக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்டன் வாவ்ரிங்கா ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

ஆண்டின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, உக்ரைனின் இலியா மார்சென்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் முர்ரே, 7-5, 7-6 (7/5), 6-2 என்ற செட் கணக்கில் மார்சென்கோவை போராடி வீழ்த்தினார்.

3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா, தரவரிசையில் 35-ஆவது இடத்திலுள்ள ஸ்லோவாக்கியாவின் மார்ட்டின் கிளிசானை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் மார்ட்டின் கிளிசான், வாவ்ரிங்காவுக்கு கடும் சவால் அளித்தார். சுமார் 3 மணி நேரம் 24 நிமிட போராட்டத்துக்குப் பின்னர், 4-6, 6-4, 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா, கிளிசானை வீழ்த்தினார்.

சுவிட்சர்லாந்தின் மற்றொரு முன்னணி வீரரும், 17 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரியாவின் ஜூர்ஜென் மெல்சரை 7-5, 3-6, 6-2, 6-2 என்ற கணக்கில் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார்.

35 வயதான ஃபெடரர், முழங்கால் காயம் காரணமாக கடந்த ஆண்டில் 7 போட்டித் தொடர்களில் பங்கேற்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், களம் கண்ட அவர் தனது முதல் ஆட்டத்தில் போராடியே வென்றார்.

இதேபோல், தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் கீ நிஷிகோரி, ரஷியாவின் ஆன்ட்ரே குஷ்னெட்சோவை 5-7, 6-1, 6-4, 6-7 (6/8), 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 2014-ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருப்பவருமான குரோஷியாவின் மரின் சிலிச், 4-6, 4-6, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் ஜெர்சி ஜனோவிச்சை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இதர ஆட்டங்களில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், அமெரிக்காவின் ஜான் இஷ்னர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸ், பிரான்சின் ஜோ வில்ஃபிரைடு சோங்கா, பிரிட்டனின் டேனியல் இவான்ஸ் உள்ளிட்டோரும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!