
11வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சர்வதேச அளவில் முக்கியமான மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய பல வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இந்த முறை புறக்கணிக்கப்பட்டார். கிறிஸ் கெய்லை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இவர்களைப் போலவே உலகின் முன்னணி வீரர்களான ஜோ ரூட், ஹாசிம் ஆம்லா, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர், நியூசிலாந்தின் அதிரடி வீரர் மார்டின் கப்டில், கோரி ஆண்டர்சன், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகிய முன்னணி வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மோர்கன், ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஷான் மார்ஷ், ஆல்ரவுண்டர் ஹென்றிகேஸ், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் சிம்மன்ஸ் ஆகியோரையும் எந்த அணியும் எடுக்கவில்லை.
தமிழகத்தை சேர்ந்த இந்திய டெஸ்ட் வீரர் முரளி விஜயும் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
கிறிஸ் கெய்ல், மலிங்கா, ஜோ ரூட், ஆம்லா, மார்டின் கப்டில், ஷான் மார்ஷ், டேல் ஸ்டெயின், இயன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், சிம்மன்ஸ், ஹென்றிகேஸ், கோரி ஆண்டர்சன், முரளி விஜய், ஜேம்ஸ் ஃபாக்னர்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.