உலக கோப்பை டீம்ல அவருக்கான இடத்தை உறுதி செஞ்சுட்டாரு!! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 21, 2019, 2:04 PM IST
Highlights

அவ்வப்போது சொதப்பினாலும், பெரும்பாலும் நன்றாக ஆடுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மிகவும் இக்கட்டான சூழலில் அவர் ஆடிய இன்னிங்ஸ் அபாரமானது.

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. 

கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் அரைசதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அதன்பிறகு தோனி தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்.

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு இந்திய அணியின் நான்காம் வரிசை வீரருக்கான இடத்தை ராயுடுன் பிடித்த நிலையில், தோனியின் ஃபார்ம், நான்காம் வரிசையில் யாரை இறக்குவது என்ற விவாதத்தை எழுப்பியது. ராயுடுதான் நான்காம் வரிசை வீரர், தோனி 5ம் வரிசைக்குத்தான் சரி என்று கேப்டன் கோலி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, தேவைப்பட்டால் கோலியே நான்காம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்தை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படுத்தியிருந்தார். சாஸ்திரியின் கருத்துடன் சில முன்னாள் வீரர்கள் உடன்பட்டும் இருந்தனர்.

மிடில் ஆர்டரில் ராயுடு, கேதர் உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டும் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில் ராயுடுவின் இடம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. அவ்வப்போது சொதப்பினாலும், பெரும்பாலும் நன்றாக ஆடுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மிகவும் இக்கட்டான சூழலில் ராயுடு அடித்த 90 ரன்கள் மிகவும் முக்கியமானது. ராயுடு - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தையே மாற்றியமைத்தது. 

உலக கோப்பைக்கான அணியில் 13 வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்ட விஷயம். அந்த 13 வீரர்களில் ராயுடுவும் ஒருவர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விவிஎஸ் லட்சுமணன், ராயுடு சமீபகாலமாக சிறப்பாக ஆடிவருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 90 ரன்கள் அபாரமானது. அது ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ். ராயுடு உலக கோப்பையில் அவருக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார். 
 

click me!