தம்பி உனக்கு அவனால் தான் பிரச்னையே.. இந்திய வீரரை எச்சரிக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் ஓபனர்

By karthikeyan VFirst Published Feb 21, 2019, 11:14 AM IST
Highlights

வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 
 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

இந்த தொடரை ஒளிபரப்ப இருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, அந்த தொடருக்கான புரமோஷனுக்காக ஒரு விளம்பரத்தை தயார் செய்து ஒளிபரப்பிவருகிறது. அதில், நிறைய குழந்தைகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் உடையை அணியவைத்து, அந்த குழந்தைகளை சேவாக் பார்த்துக்கொள்வது போன்று உருவாக்கியுள்ளது. 

இதைக்கண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன், இந்த விளம்பரம் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட்டு அசிங்படுத்துவது போல் உள்ளது என்பதை உணர்ந்து, இந்திய அணிக்கும் சேவாக்கிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட்டு காமெடி பண்ணாதீர்கள். யார் பேபி சிட்டர்கள் என்பது உலக கோப்பையில் தெரியும் என்று காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். 

அந்த புரமோ வீடியோவை பார்த்ததிலிருந்தே ஹைடன் கடும் ஆதங்கத்தில் இருக்கிறார். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்த வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இந்த தொடர் குறித்து ஏராளமான கருத்துகளை தெரிவித்துவருகிறார். 

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் தவானுக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் நெருக்கடி கொடுப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான தவானுக்கு வலது கை வேகப்பந்து வீச்சாளரான கம்மின்ஸ் சிக்கலாக இருப்பார் என்பதே ஹைடனின் கருத்து. 

இந்திய அணி டாப் 3 பேட்ஸ்மேன்களையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்நிலையில், தவானுக்கு கம்மின்ஸ் பிரச்னையாக இருப்பார் என ஹைடன் கருத்து தெரிவித்து, அதன்மூலம் அச்சுறுத்த நினைக்கிறார். என்ன நடக்கிறது என்பதை களத்தில் பார்ப்போம். 
 

click me!