பாண்டியாலாம் ஒரு ஆல்ரவுண்டரா..? அவருதாங்க கெத்து.. மேத்யூ ஹைடன் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 21, 2019, 10:23 AM IST
Highlights

இந்திய அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. பவர் ஹிட்டிங், சிறப்பான பவுலிங் பங்களிப்பு, அபாரமான ஃபீல்டிங் என இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டராகவும் வெற்றி வீரராகவும் திகழ்ந்துவருகிறார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்தான் சிறந்த வீரர் என்று மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடைசி நேர பவர் ஹிட்டிங், சிறப்பான பவுலிங் பங்களிப்பு, அபாரமான ஃபீல்டிங் என இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டராகவும் வெற்றி வீரராகவும் திகழ்ந்துவருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துவருகிறார். அண்மையில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தாலும் பாண்டியா தான் இந்திய அணியின் பிரைம் ஆல்ரவுண்டர். 

இந்திய அணியில் பாண்டியாவை போல ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலுமே சிறந்து விளங்குகிறார். இந்நிலையில், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேத்யூ ஹைடன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வளர்ந்துள்ளார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டமானதுதான். அவர் ஒரு தரமான ஆல்ரவுண்டர். 

ஸ்டோய்னிஸ் அனைத்து வகையிலும் அபாரமாக ஆடி அணிக்கு வெற்றிகளை தேடி கொடுக்கிறார். ஹர்திக் பாண்டியாவிற்கும் அந்த பொறுப்பு உள்ளது. பாண்டியாவும் சிறந்த வீரர். எனினும் தற்போதைய சூழலில் ஸ்டோய்னிஸ்தான் பாண்டியாவை விட சிறந்த ஆல்ரவுண்டர் என ஹைடன் தெரிவித்துள்ளார். 
 

click me!