6ம் இடத்தில் அவரை இறக்குங்க.. தமிழனுக்கு கைகொடுத்து தூக்கிவிடும் கும்ப்ளே

By karthikeyan VFirst Published Dec 3, 2018, 4:59 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6ம் வரிசை வீரராக யாரை களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6ம் வரிசை வீரராக யாரை களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, தொடர் தோல்விகளிலிருந்து மீள இந்த தொடரை வெல்வது அவசியம். அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரை வென்று உத்வேகம் பெறும் முனைப்பில் உள்ளது. 

எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. இந்த தொடரில் இந்திய அணி பெரிதும் நம்பிய பிரித்வி ஷா, பயிற்சி போட்டியில் காயமடைந்து முதல் போட்டியிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் முரளி விஜயின் சிறப்பான சதம், ராகுல் ஃபார்முக்கு வந்திருப்பதும் நம்பிக்கையை அளித்தது. 

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கும் ரோஹித் சர்மா 6ம் வரிசையில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் 6ம் வரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆஸ்திரேலிய தொடரில் 6ம் வரிசையில் யார் களமிறக்கப்படுவார் என்பது கேள்வியாக உள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த கும்ப்ளே, ஆஸ்திரேலியாவில் 6ம் வரிசைக்கு ரிஷப் பண்ட் சரியாக வரமாட்டார். அஷ்வினை 6ம் வரிசையில் களமிறக்கலாம். அவரால் ஆஸ்திரேலியாவில் அந்த இடத்தில் சிறப்பாக ஆடமுடியும். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அஷ்வின் 6ம் வரிசை வீரராக சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இங்கிலாந்தில் கூட அஷ்வின் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அஷ்வினின் பேட்டிங் டெக்னிக்கும் நன்றாக இருக்கீறது. எனவே அவரை 6ம் வரிசையில் களமிறக்கலாம் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார். 
 

click me!