ரோஹித் சர்மா ஏன் கண்டிப்பா டெஸ்ட் டீமுக்கு தேவை..? ஒரே வாக்கியத்தில் தெறிக்கவிட்ட முன்னாள் கோச்

By karthikeyan VFirst Published Dec 3, 2018, 3:05 PM IST
Highlights

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் ஆட வேண்டியதன் அவசியத்தை ஒரே வாக்கியத்தில் கூறியுள்ளார் கும்ப்ளே. 
 

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் ஆட வேண்டியதன் அவசியத்தை ஒரே வாக்கியத்தில் கூறியுள்ளார் கும்ப்ளே. 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் இன்னும் நிரந்தர இடம் பிடிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இரண்டு போட்டிகளில் சதமடித்து மிரட்டலாக டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கிய ரோஹித்துக்கு அடுத்தடுத்து சோகம்தான் மிஞ்சியது. 

ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்காதது சோகமான சம்பவம்தான். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கான முமண்ட்டத்தை பிடித்துவிட்டார் என்றால், அதன்பின்னர் அவரை யாராலும் அசைக்க முடியாது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். எனினும் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அவரை கண்டிப்பாக ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என்பதே பல முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. 

இந்நிலையில், ரோஹித் சர்மாவை ஏன் கண்டிப்பாக டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கும்ப்ளே, ரோஹித் சர்மா அடித்தால் எப்படி அடிப்பார், அணிக்கு எப்படியான பங்களிப்பை அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் ரோஹித் மீண்டும் டெஸ்ட் அணியில் வேண்டும் என்றார் கும்ப்ளே. 

click me!