தோனியையே நக்கல் பண்ற அளவுக்கு ஆயிடுச்சா..? தல ரசிகர்களை மண்டை சூடாக்கிய குல்தீப்

By karthikeyan VFirst Published Oct 27, 2018, 12:57 PM IST
Highlights

இந்திய அணியின் மூத்த மற்றும் அனுபவ வீரரான தோனியை நக்கல் செய்யும் விதமாக குல்தீப் யாதவ் பேசியது தோனி ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. 
 

இந்திய அணியின் மூத்த மற்றும் அனுபவ வீரரான தோனியை நக்கல் செய்யும் விதமாக குல்தீப் யாதவ் பேசியது தோனி ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு பிறகான குல்தீப்பின் பேச்சு, தோனியுடனான பழைய நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு பேசியதாக உள்ளது. 

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, தற்போதைய சூழலில் பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரரான அவரது ஆலோசனை மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டு காரணங்களுக்காகத்தான் அணியில் நிரந்தரமாக இடம்பிடித்துள்ளார்.

இக்கட்டான நேரங்களில் கேப்டன் மற்றும் பவுலர்களுக்கு ஆலோசனை, கள வியூகம் ஆகியவற்றில் தோனியின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும். பவுலர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கும் தருணங்களில் அவர்களை தோனி வழிநடத்துவார். கேப்டனுக்கும் இக்கட்டான சூழலில் ஆலோசனைகளை வழங்குவார். 

தோனியின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்திய வீரர்கள் செயல்படுவர். ஆனால் குல்தீப் யாதவ் மட்டும் அவ்வப்போது தோனியின் கருத்துடன் முரண்பட்டு அவரது கருத்தை தெரிவிப்பார். அவ்வாறு குல்தீப் செயல்பட்ட தருணங்களில் தோனி சற்று கடுமையாகவே அவரிடம் நடந்துகொண்டுள்ளார். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் கடைசி பந்தில் அந்த அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை. அந்த நேரத்தில் ஆலோசனைப்படி களவியூகம் மாற்றியமைக்கப்பட்டது. தேர்டுமேன் திசையில் நின்ற ஃபீல்டர் முன் கொண்டுவரப்பட்டு, பாயிண்ட் திசையில் நின்ற ஃபீல்டர், டீப் பேக்வார்டு பாயிண்டுக்கு மாற்றப்பட்டார். இந்த களவியூகத்தால் கடைசி பந்தை உமேஷ் யாதவ் வைடு யார்க்கராகத்தான் வீசப்போகிறார் என்பதை கணித்த ஷாய் ஹோப், அதற்காக முன்கூட்டியே தயாராக, உமேஷும் அதேமாதிரி வீச, அந்த பந்தை பவுண்டரி விளாசி போட்டியை டிரா செய்தார். 

இந்த இடத்தில் தோனியின் வியூகம் ஷாய் ஹோப்பால் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய குல்தீப் யாதவிடம் கடைசி பந்தில் களவியூகம் மாற்றியமைக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குல்தீப் யாதவ், நான் சிறியவன், எனக்குத் தெரியாது. நான் 30 ஆட்டங்களில்தான் ஆடியுள்ளேன். ஆனால் மாஹி பாய்(தோனி) 300 ஆட்டங்களில் ஆடியுள்ளார். அவருக்கு அனுபவம் அதிகம். அதுதான் நடந்தது. எங்களை விட அனுபவமிக்கவர் தோனி, அந்தத் தருணத்தில் அவருக்கு அப்படித் தோன்றியதால் அதை செய்தனர் என்று குல்தீப் யாதவ் கூறினார். 

இதில் என்ன நக்கல் இருக்கிறது என்று கேட்கிறீர்களா..? கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் களவியூகத்தை மாற்றியமைக்குமாறு தோனி கூறியபோது, அதற்கு குல்தீப் மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த கூல் தோனி, 300 போட்டிகளில் ஆடிய நான் என்ன முட்டாளா..? என்று காட்டமாக குல்தீப்பிடம் கேட்க, உடனடியாக தோனியுடன் உடன்பட்டார் குல்தீப். இதை குல்தீப்பே தெரிவித்துள்ளார். 

300 போட்டிகளில் ஆடிய நான் என்ன முட்டாளா? என்று தோனி கேட்டதை நக்கல் செய்யும் விதமாகத்தான், வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு பின்னர், நான் சின்ன பையன்.. தோனி பாய் 300 போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவர் என்று நக்கலாக கூறியுள்ளார். 

ஆசிய கோப்பையில் கூட தோனி தலைமையேற்று வழிநடத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனியின் களவியூகத்தை மாற்றக்கோரியபோது, சும்மா பவுலிங் போடுகிறாயா? இல்ல பவுலரை மாற்றவா? என்று தோனி கேட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் தோனியை நக்கல் செய்யும் விதமாக குல்தீப் பேசியுள்ளார். குல்தீப்பின் செயலால் தோனியின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். 
 

click me!