300 போட்டியில் ஆடியிருக்கேன்.. நான் என்ன முட்டாளா..? குல்தீப்பை திட்டிய கூல் தோனி

First Published Jul 12, 2018, 10:14 AM IST
Highlights
kuldeep revealed when dhoni scold him


கூலான வீரராகவும் மனிதராகவும் அறியப்படும் தோனி, தனது பொறுமையை இழந்து தன்னை கோபமாக திட்டிய தருணம் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது நிதானமான அணுகுமுறையால் கூல் கேப்டன் என பெயர் பெற்றவர். இக்கட்டான நேரங்களிலும் சரி, வீரர்கள் தவறிழைக்கும் போதும் சரி, தோனி கோபமோ பதற்றமோ படமாட்டார். வீரர்களை ஊக்குவித்து அவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெற்று போட்டியை வென்றுவிடுவார்.

போட்டி குறித்த அறிவும் தெளிவும் பெற்ற தோனிக்கு, அவர் இளம் வீரராக இருக்கும்போதே சிறப்பாக இருந்தது. பீல்டிங் அமைப்பு, பவுலர்களுக்கு அறிவுரை, கள வியூகம் என அனைத்திலுமே தோனி வல்லவர். ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி.

தற்போதைய அணியில் மிகவும் சீனியர் வீரரும் தோனி தான். விக்கெட் கீப்பரான தோனி, எல்பிடபிள்யூ விக்கெட்டை கணித்து ரிவியூ கேட்பதிலும் வல்லவர். அவரது கணிப்பும் அனுமானமும் பெரும்பாலும் தவறாகாது. அதேபோல் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி வீரராக ஆடி வந்தாலும், கோலி அல்லது ரோஹித் என யார் கேப்டனாக இருந்தாலும், ஃபீல்டிங் நிறுத்துவது, பவுலர்களுக்கு ஆலோசனை ஆகியவற்றை தோனி வழங்கிக்கொண்டே தான் இருக்கிறார்.

குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் இளம் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப்பிற்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களை மெருகேற்றியுள்ளார். இதை அவர்களே பலமுறை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தோனியின் அறிவுரையை கேட்காததால் அவர் தன்னை திட்டிய தருணம் குறித்து குல்தீப் யாதவ் பகிர்துள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியா இலங்கை இடையேயான தொடரின்போது இரண்டாது டி20 போட்டியில் நடந்த சம்பவம் குறித்து குல்தீப் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக வாட் த டக் என்ற நிகழ்ச்சியில் பேசிய குல்தீப் யாதவ், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நான் பந்துகளை தூக்கி வீசினேன். அவற்றையெல்லாம் இலங்கை வீரர்கள் அடித்து ஆடினர். தூக்கி வீசப்பட்ட பந்துகளை எல்லாம் சிக்ஸர்கள் விளாசினார். அப்போதெல்லாம் நான் தோனியை பார்ப்பேன். அவர், இன்னும் நன்றாக தூக்கிவீசு, விக்கெட் எடுக்கும் தருணம் தூரத்தில் இல்லை என்பார். அப்போது ஃபீல்டிங் அமைப்பில் சில திருத்தங்களை சொன்னார் தோனி. ஆனால் தற்போது உள்ள வியூகம் சரிதான் என பதிலளித்தேன். உடனே தோனிக்கு கோபம் வந்துவிட்டது. 300 போட்டிகளில் ஆடிய நான் என்ன முட்டாளா..? என கோபமாக கேட்டார். உடனே நான் அவர் சொன்னபடி கேட்டு ஃபீல்டிங்கை மாற்றியமைத்தேன். விக்கெட்டும் விழுந்தது என தெரிவித்தார்.

இதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் தோனியின் ஆலோசனையை மதிக்காமல் குல்தீப் ரிவியூ கேட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!